பிரான்ஸ் பெண் போலீஸ் அதிகாரியை திடீரென மர்ம நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர் .
பிரான்ஸ் தலைநகரில் தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவல் நிலைய பாதுகாப்பு நுழைவு பகுதியில் நிர்வாகப் பணிப்புரியும் பெண் போலீசாரை கழுத்தை அறுத்து கொலை செய்யதுள்ளனர் . அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இவ்வாறு பரிதாபமாக கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட ஸ்டீபனி (49 )இந்தப் பெண் போலீஸ் அதிகாரி நிர்வாக ஊழியரான தேசிய சேவைக்காக பணியாற்றி வந்தவர். இந்த கொடூர செயலின் மூலம் மீண்டும் பிரண்ட்ஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக அதிபர் இம்மானுவேல் கேக்ரான் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கூறியுள்ளார்.
மேலும் துனிசியா நாட்டைச் சேர்ந்தவன் தான் அந்தப் பெண் அதிகாரியை கத்தியால் குத்தியுள்ளார் என்றும் அவன் மத அடிப்படைவாதி என்று போலீசார் கூறியுள்ளனர். அந்தக் கொலையாளி 2009 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பிரான்சில் குடியேறியதாகவும் அதன் பின்பு அனைத்து ஆவணங்களையும் முறைப்படி பெற்றதாகவும் பிரான்சில் தான் அவன் வசித்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.