செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 25 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள செந்நீர் குப்பம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் 25 செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுரேஷ் பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் கடையில் பணம் மற்றும் பல ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.