இந்தியாவில் கொரோனா 2 வது அலை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை மிக வேகமாக பரவி மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், ” கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் சரியான முறையில் மக்களுக்கு போடப்படாததால் உயிர் இழப்புகள் அதிகமாக ஏற்பட்டுக்கொண்டே வருகிறது என்று கூறினார்.
இந்திய அரசு கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாகபட்டுள்ளது. மக்களுக்கு இடையேயான கூட்டத்தை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளும் இந்திய அரசு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்று கொரோனவைரஸ் 2 வது அலை நினைவூட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.