இந்திய விமானப்படை 23 ஆக்சிஜன் உற்பத்திக்கான நடமாடும் நிலையத்தை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவிலிருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கின்றனர். இதற்கிடையே ஒரு மாநிலத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்ற மாநிலத்திற்கு விமானமங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 23 ஆக்சிஜன் உற்பத்திக்கான நடமாடும் நிலையத்தை இந்திய விமானப்படை ஜெர்மனியிலிருந்து ஒரே வாரத்திற்குள் இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. ஒவ்வொரு உற்பத்தி நிலையத்திலும் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 2400 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இந்திய விமானப்படை செய்துள்ளது. இதற்கு இந்திய பொதுமக்கள் ஜெர்மனிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.