தனக்கு கோரானா தொற்று வந்ததாக அச்சத்தில் இருந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் லோகநாதன் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததுள்ளது. இதனையடுத்து லோகநாதனுக்கு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த லோகநாதன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆதம்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.