Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் பரபரப்பு புகைப்படம்… மரணம்..!!

குஜராத்தில் வெளியான சந்தேஷ் என்ற நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் கண்ணீர் அஞ்சலியுடன் வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குஜராத்திலும் இதே போன்ற சூழ்நிலையை தான் உருவாகியுள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் வெளியாகும் சந்தோஷ் என்ற உள்ளூர் நாளிதழில் எட்டு பக்கங்களுக்கு கொரோனாவால் இறந்த 285 பேரின் புகைப்படங்களுடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் உள்ள 20 பக்கங்களில் 8 பக்கங்களுக்கு கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள் வெளியாகியது. இந்த செய்தித்தாளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |