சோயாபீன்ஸ் கொலஸ்டிரால் அளவைக் குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புடைய சோயாபீன்ஸ் கொண்டு சுவையான சோயா பீன்ஸ் கிரேவி செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் – 1 கப்
தக்காளி – 1
வெங்காயம் – 1
தேங்காய் – 1/4 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையானஅளவு
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையானஅளவு
செய்முறை:
முதலில் ஊற வைத்த சோயாவை , கழுவி வேக வைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை , சோம்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, வதக்கி கொள்ள வேண்டும்.பின் அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி , பின்பு சோயாவை சேர்த்து கொள்ள வேண்டும் . துருவிய தேங்காய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் கிரேவி தயார்!!!