Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

“அத்திவரதர் உற்சவம்” கத்திரிப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு தரிசனம்..!!

அத்திவரதர் உற்சவத்தின் 40ஆம் நாளான இன்று கத்திரிப்பு நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாற்பதாம் நாளான இன்று கத்திரிப்பு  நிற வஸ்திர பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அத்திவரதர் பஞ்ச வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை ஒன்று அணிவிக்கப்பட்டு,

Image result for அத்திவரதர் நின்ற கோலம்

செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலை முதலே அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் vip vvip அனுமதி வைத்திருப்பவர்களுக்கு என தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |