Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில்களில் இன்று முதல் ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி நாளை முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்ட்ரல், கோயம்பேடு, விமான நிலைய வழித்தடம், சென்ட்ரல் பரங்கிமலை வழித்தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியிலும், விம்கோ நகர் விமான நிலையம் வழித்தடத்தில் ஒரு மணி நேர இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். மேலும் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத கட்டண சலுகையை ரத்து இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |