Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. வந்திருச்சி அடுத்த ஆபத்து…. கிளம்பிருச்சு புதிய வைரஸ்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி உலக நாடுகள் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் குறைந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது அனைத்து உலக நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு கூட மிகவும் அச்சப்படுகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காற்றில் ஒரு மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்றும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொற்றும் திறன் வாய்ந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது உலக நாடுகள் அனைத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |