Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: இன்று ஐபில் போட்டியில் … 2 லீக் ஆட்டங்கள்  நடக்கிறது …!!!

இன்றைய ஐபில் தொடரில் ,  2 லீக் ஆட்டத்தில்  சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மற்றும் மற்றொரு போட்டியில் ஹைதராபாத் -டெல்லி அணிகள் மோதுகின்றன .

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ,மாலை 3.30மணிக்கு தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே ஆர்சிபி அணியின் தொடர் வெற்றிக்கு ,சிஎஸ்கே முற்றுப்புள்ளி வைக்குமா? அல்லது ஆர்சிபி அணி தொடர் வெற்றியை கைப்பற்றுமா ? என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -டெல்லி கேப்பிடல்ஸ்:

மற்றொரு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் , இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கு முன் 4 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் , 1 போட்டியில் தோல்வியடைந்து, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுபோல 4 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ,3 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்று நடக்க உள்ள போட்டியில் எந்த  அணி ,வெற்றியை கைப்பற்ற போகிறது , என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Categories

Tech |