Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தி.மு.க தேவையில்லாமல் பேசுகிறது”… பாஜக முன்னாள் தேசிய தலைவர்… பரபரப்பு பேட்டி..!!

பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா, தி.மு.க.வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேவையில்லாமல் பேசுகிறது என்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவினால் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு குறித்து பேசுகின்றனர். இதன்மூலம் திமுக ஆட்சிக்கு வராது என்பது தெரிய வருகிறது. மேலும் பெண் காவலர்கள் பயன்படுத்தும் மொபைல் டாய்லெட் கண்டெய்னரை கண்டால், தேங்காய் நார் ஏற்றிச்செல்லும் கண்டெய்னர் லாரியை கண்டான் வாக்குப்பதிவு எந்திரங்களை இதிலிருந்து ஹேக் செய்து விடுவார்கள் என்றெல்லாம் பேசுவது அபாண்டமாக உள்ளது. வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள டிஷ் ஆண்டனாவை கழட்ட செல்வது அடிப்படை விஞ்ஞான அறிவு கூட இல்லாதது போல் தெரிகிறது.

அவ்வாறு வாக்கு பெட்டி ஹேக் செய்ய முடியும் என்றால் எப்படி பாராளுமன்ற தேர்தலில் திமுக 38 இடங்களை பெற்றிருக்க முடியும். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புகள் உள்ள நிலையில் நாளை தோற்றுப்போனால் கூறுவதற்கு சாக்கு வேண்டும் என்பதற்காக இதுபோல் பேசுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் தடுப்பூசிகள் குறித்த வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்று கூறிய அவர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். தடுப்பூசிகள் குறித்த பொய்யான வதந்திகளை பரப்பி வரும் மன்சூர் அலிகானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |