Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையாக இருங்க..! அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் 4 பேருக்கும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 2 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் ஒருவருக்கும் என மொத்தம் 17 பேருக்கு கடந்த 22-ஆம் தேதி புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 2440 அதிகரித்துள்ளது.

அதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,343 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 74 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் 844 பேருக்கு வரவேண்டியுள்ளது.

Categories

Tech |