Categories
தேசிய செய்திகள்

இனி 3மாசத்துக்கு இதான்…. உடனே அமல்படுத்துங்க… சரியான நேரத்தில் செம முடிவு…. அதிரடி காட்டும் மத்திய அரசு …!!

நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜனுக்கு சுங்கவரி மற்றும் சுகாதார செஸ்  வரியிலிருந்து விளக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதனால் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வேறு வழியின்றி புதிய நோயாளிகள் சேர்க்கையை நிறுத்திய மருத்துவமனைகள்,  பழைய நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போக்கை பிரதமர் மற்றும் நரேந்திர மோடி வருவாய்துறை உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருத்துவ ஆக்சிஜன் தடை இன்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் உற்பத்திக்கான உபகரணங்களுக்கும் சுங்கவரி மற்றும் சுகாதார செஸ் வரி விலக்கு அளிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதே போல் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கான சுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அடுத்த மூன்று மாதங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |