Categories
உலக செய்திகள்

மாயமான நீர்மூழ்கிக் கப்பல்…. 53 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

இந்தோனேசிய கப்பல் படைக்கு சொந்தமான KRI Nanggala 402 நீர்மூழ்கி கப்பல், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பாலி தீவின் வடக்கே காணாமல் போனது. இந்நிலையில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் சில பாகங்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். கடலுக்கடியில் 700 மீட்டர் ஆழத்தில் கப்பல் மூழ்கி இருக்கலாம். அதிலிருந்து 53 வீரர்களும் இருந்திருக்கக் கூடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மீட்பு பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |