இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 ஊழியர்களும் உயிரிழந்துவிட்டனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாலி கடற்பகுதியில் இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயமானது . இதனிடையே இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படை குழுவினர் நேற்றுவரை 53 பயணிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருக்கும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது 53 ஊழியர்களும் மரணமடைந்து விட்டனர் என்றும் கப்பல் மீட்க முடியாத 850 மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் பாலி கடற்பகுதி ஆழமானது 1500 மீட்டர் என்றும் நீர்மூழ்கி கப்பல் 500 மீட்டர் ஆழம் வரை மட்டுமே செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரணமடைந்தவர்களின் உடல்கள் கூட கிடைக்குமா என்பது குறிப்பிடத்தக்கது.