பதிவு செய்த தொலைபேசி எண்ணிலிருந்து எரிவாயு முன்பதிவு எப்படி செய்வது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
தேவைப்படும் விபரங்கள்:
வாடிக்கையாளரின் எண் (CUSTOMER ID)
முன்பதிவு பெய்யும் முறை:
முதலில் உங்கள் தொலைபேசியில் எரிவாயு முன்பதிவு செய்யப்பட வேண்டிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். (குறிப்பு: எரிவாயு முன்பதிவு செய்ய வேண்டிய எண்ணானது உங்களின் எரிவாயு புத்தகத்தின் முன்பக்கத்தில் கொடுக்கபட்டிருக்கும் என்பதை நிலைவில் கொள்ளுங்கள்)
அழைப்பு இணைக்கப்பட்ட பின் கணினி குரலில் ஒலிபரப்பாகும். அதில் நீங்கள் தமிழில் பதிவு பெய்ய விரும்பினால் எண் 1-ஐ அழுத்த வேண்டும்.
அடுத்து வாடிக்கையாளரின் எண்ணை உள்ளீடு செய்து அதனை உறுதி செய்ய எண் 1-ஐ அழுத்த வேண்டும்.
பின்னர் எரிவாயு முன்பதிவை உறுதி செய்ய எண் 1-ஐ அழுத்த வேண்டும்.
உங்கள் விண்ணப்பம் உறுதி பெய்து பின் குறிப்பு எண்ணை கணினி குரலில் ஒலிக்கப்படும். அதனை வேண்டுமென்றால் குறித்து வைத்து கொள்ளலாம்.
அதன் பின்னர் எரிவாயு முன்பதிவு உறுதி செய்யப்பட்டது என்று உங்கள் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்பெய்தி அனுப்பப்படும். பிறகு நீங்கள் பதிவு பெய்த முகவரிக்கு 2 அல்லது 3 நாட்களில் எரிவாயு விநியோகம் செய்யப்படும்.