Categories
உலக செய்திகள்

மேகன் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.. ஓபரா வின்ஃப்ரே பல்டி..!!

பிரிட்டனில் ஓபரா வின்ஃப்ரேவுடன் ஹரி-மேகன் நேர்காணலில் இவ்வளவு வெளிப்படையாக மேகன் ரகசியங்களை கூறுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று ஓபரா கூறியுள்ளார். 

பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓபரா வின்ஃப்ரேக்கு கொடுத்த நேர்காணல் அரச குடும்பத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓபரா வின்ஃப்ரே மேகன் இவ்வாறு வெளிப்படையாகப் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி ஒரேயடியாக அந்த சர்ச்சையிலிருந்து தப்பித்துள்ளார்.

மேலும் தன் மகன் ஆர்ச்சி பிறக்கும் சமயத்தில் அவனது நிறம் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக அரச குடும்ப உறுப்பினர் ஒருவர் கேட்டதாக மேகன் கூறியதை கேட்டு தான் அதிர்ந்ததாக ஓபரா கூறியுள்ளார். அந்த நொடி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து, திகைத்து அமைதியாகி விட்டதாக கூறியுள்ளார்.

அதாவது அந்த நேர்காணலில் ஓபரா திகைத்து வாய் பிளப்பது போன்ற பல மீம்கள் வெளியாகியிருந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் அவர், என்ன? இவ்வளவு ரகசியங்களையும் வெளிப்படையாக கூற போகிறீர்களா? என்று நினைத்து ஆச்சரியமடைந்ததாக கூறியுள்ளார். ஆனால் நேர்காணலுக்கு முன்பு ஹரி மற்றும் மேகன் இருவரையும் சந்திக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகள் மட்டும்தான் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் இருவருமே முடிந்த அளவிற்கு உண்மையை கூற விரும்பினார்கள் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் இந்த நேர்காணல் இவ்வளவு சர்ச்சையை உண்டாக்கும் என்று சிறிது கூட நான் நினைத்துப்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு ஓபரா சர்ச்சையிலிருந்து தப்பினாலும், அந்த நேர்காணலால் அரசகுடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு, இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பின்பும் சரியாகவில்லை..

Categories

Tech |