எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகளில் பரவி வந்த கொரோனா வைரஸ் இப்போது எவரெஸ்ட் சிகரம் வரை பரவ தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் சீசன் தொடங்கியுள்ளதால் நேபாள சுற்றுலா துறை அமைச்சகம் 377 பேருக்கு அனுமதி அளித்துள்ளது. இதனிடையே அடிவாரத்தில் தங்கியிருக்கும் மலை ஏறும் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. நார்வே நாட்டை சேர்ந்த எர்லண்ட் நெஸ் என்பவருக்கு மலை ஏறும்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.