Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் புதிய முல்லையா இது?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து  வந்த சித்ராவின் மறைவிற்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் .

தற்போது காவியா முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் அவ்வப்போது நடிகை காவியாவின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மார்டன் உடையில் முழு மேக்கப்பில் காவியா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லையா இது! என ஆச்சரியமடைந்துள்ளனர்.

Categories

Tech |