Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அம்மா வீட்டில் இல்ல” பின்புறம் அழைத்து சென்றவர்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பச்சாவடிமேடு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொடக்க அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செங்கல் சூளை தொழிலாளியான சூரப்பட்டை பகுதியில் வசிக்கும் தேவராசு என்பவர் மாணவியின் தாயை செங்கல்சூளை வேலைக்காக அழைத்துச் செல்ல சென்றுள்ளார். அந்த சமயம் மாணவியின் வீட்டில் அவரது தாய் இல்லாததால் அந்த சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த தேவராசு அவரை தாக்கியுள்ளார்.

அதன்பின் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு பின்புறம் அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த அனைத்து சம்பவத்தையும் தனது தாய் வந்தவுடன் அந்த சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |