கொரானா கட்டுப்பாடு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகெங்கிலும் கொரானா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பேரூராச்சி பகுதிகளில் கொரானா பாதிப்பானது அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே மக்கள் கொரானா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனை அடுத்து அரசு நெறிப்படுத்திய விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதன் பின் முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வெளியில் சுற்றித்திரும் நபர்களை காவல்துறையினர் அழைத்து கண்டித்து உள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் ஒருபுறம் விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களை கண்டித்தாலும், மறுபுறம் விதிமுறைகளை முறையாக பின்பற்றுபவருகளுக்கு இனிப்பு வழங்கி அவர்களை பாராட்டிள்ளனர். இவ்வாறு கொரானா தொற்று வரவாமல் தடுக்கும் வண்ணம் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.