Categories
உலக செய்திகள்

எங்களுக்கு டிக்கெட் கிடையாது…. ரயிலில் பயணிக்கும் கால்நடைகள்…. வைரலாகி வரும் வீடியோ….!!

ரயிலில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

சீனா சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் மக்கள் பயணிக்கும் ரயில் ஒன்றில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சீனா மார்னிங் போஸ்ட் கூறுகையில் இது குறைந்த வேக விவசாயிகள் ரயில் என்றும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நகர சந்தைக்கு எடுத்துச் செல்ல உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

அதனால் ஆடுகள், மாடுகள் மற்றும் பன்றிகள் உட்பட அனைத்து கால்நடைகளும் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என தெரிவித்துள்ளது.இந்நிலையில் வீடியோவை பார்த்த மக்கள் அனைவரும் அந்தக் கால்நடைகளின் செயல்கள் குறித்து பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |