Categories
தேசிய செய்திகள்

டெல்லி மருத்துவமனையில் 20 நோயாளிகள் பலி…. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட சோகம்….!!

டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 200 பேர் உயிருக்கு போராடி வருவதால் தேவையான ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆக்சிஜன் அதிகமாகத் தேவை என்று டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

Categories

Tech |