தமிழகத்தில் உள்ள திருச்சி சிறப்பு முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 18 இலங்கை தமிழர்கள் தங்களது உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த 89 பேர் மற்றும் நைஜீரியா, வங்கதேசம், பல்கேரியா, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 108 பேர் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, முதல்கட்டமாக 40 பேரின் முடிவுகள் வெளிவந்தது. அதில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள முகாம்வாசிகள் சிறப்பு முகாமில் சிகிச்சை மையத்தை அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
அதோடு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பெறுவதற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த இலங்கை தமிழர்கள், தங்களை பொய் வழக்கில் கைது செய்து தண்டனை காலத்திற்கு மேலாக தங்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாக கூறிய அவர்கள் கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த காலகட்டத்திலாவது தங்களை விடுவித்து வேண்டும், குடும்பத்தோடு வாழ விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.