வழக்கமான ஃபிரிட்ஜ்களில் மற்றும் ஃபிரீசர்களில் சேமித்து வைக்கும் வகையிலும் அல்லது உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏற்ற திரவ வடிவிலும் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் ஃபைசர் பயான்டெக் தடுப்பு மருந்தை 70 டிகிரி செல்சியல் என்ற உறைநிலையில் வைக்க வேண்டும் என்பதால் விநியோகிக்க பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் புதிய வடிவில் வர உள்ள தடுப்பு மருந்தை வழக்கமான குளிர்பதன நிலையிலேயே சேமித்து வைத்துக்கொள்ளலாம் என ஃபைசர் நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளார். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி 100 சதவீதம் சிறப்பாக வேலை செய்வதாகவும் இந்திய வகைக்கு எதிராகவும் திறனுடன் செயல்படும் என்றும் அவர் கூறினார்.