Categories
தேசிய செய்திகள்

அதிகரித்து வரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை…. 22 லட்ச ருபாய் காரை விற்று இளைஞர் செய்த செயல்…. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்படும் நோயாளிகளின் நிலையை பார்த்து ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை மலாட் நகரை சேர்ந்தவர் ஷாஹனாவாஸ் ஷேக் என்பவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் போராடும் நிலையை கண்டு தன் சொந்த காரை விற்று 22 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். விற்ற  பணத்தை சுமார் 170 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொண்ட பிறகு அதனை கொண்டு சேர்த்து எப்படி உபயோகிப்பது என்பதையும் சொல்லிக் கொடுத்து வருகிறார். இதனால் அந்த பகுதி மக்களால் “ஆக்சிஜன் மனிதன்”  என அழைக்கப்பட்டு வருகிறார். இதுகுறித்து ஷேக் கூறுகையில் இதற்கு ஒரு குழுவை அமைத்து தொலைபேசி எண்ணையும் உருவாக்கியுள்ளேன் என தெரித்துள்ளார். மேலும் நோயாளிகள் அதனை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |