ஜெர்மனியில் புஹ்ல் பகுதியில் 64 வயது முதியவர் சிறார் துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவருக்கு பிராந்திய நீதிமன்றம் கடுமையான சிறை தண்டனை விதித்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள புஹ்ல் பகுதியில் 64 வயது முதியவர் ஒருவர் சுற்றுவட்டார பகுதிகளில் 5 முதல் 11 வயதிற்குள் உள்ள சிறுமிகளை துஷ்பிரயோகம் செயல்களுக்கு இரையாக்கியுள்ளார். இந்த கொடூர சம்பவம் 2005 முதல் 2019 வரை நடந்து வந்துள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் துணிச்சலாக காவல்துறையினரை நாடிய போது இந்த சம்பவம் அம்பலமானது. இதையடுத்து அந்த முதியவர் மீது 134 வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அந்த முதியவர் இதுவரை சிறார்களிடம் 14 முறை கொடூரமாக நடந்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேலும் அவர் 180 சிறார் துஷ்பிரயோக வழக்குகளில் தொடர்பு கொண்டிருக்கலாம், வேறு குற்றங்களிலும் அவர் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த பேடன்-பேடன் பிராந்திய நீதிமன்றம் அந்த முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.