நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது . இதை தொடர்ந்து இவர் சூர்யா 40, வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது .
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கஜினி. இந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. கஜினி ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பின்போது அமீர்கானுடன் சூர்யா எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .