நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது . இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
Excited to be joining hands with @Psmithran on this biggie. Revealing the first look for you all. Lots of love!#Sardar #SardarFirstLook – https://t.co/xcjhxcPWt8 #staysafe
— Karthi (@Karthi_Offl) April 25, 2021
இந்நிலையில் நடிகர் கார்த்தி இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்தார் என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நரைத்த தாடி- மீசை, நீண்ட தலைமுடி சுருங்கிய முகத்துடன் கார்த்தி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.