Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ்  சேனைக்கிழங்கு  சுக்கா !!!

சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ்  சேனைக்கிழங்கு  சுக்கா செய்யலாம் வாங்க. 

சேனைக்கிழங்கு – 1/4 கிலோ

சின்ன வெங்காயம் – 10

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 3 [அரைத்துக் கொள்ளவும் ]

சோம்பு – 1/4 டீஸ்பூன்

பூண்டு – 1

காய்ந்த மிளகாய் – 4

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

கறி மசாலா – 1/2 ஸ்பூன்

உடைத்த கடலை  – 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 3  டீஸ்பூன்

உப்பு- தேவைக்கு ஏற்ப

எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

elephant yam க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் சேனைக்கிழங்கை , சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் போட்ட பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு,  பூண்டு, காய்ந்த மிளகாய் , சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள் சேர்க்க வேண்டும்.இதனுடன்  அரைத்த தக்காளி  , உப்பு மற்றும் சிறிது   தண்ணீர் விட்டு கொதித்த பின் சேனை கிழங்கைச் சேர்த்து  தேங்காய்த் துருவல் மற்றும்  உடைத்த கடலை தூள் தூவி  இறக்கினால் டேஸ்டியான சேனைக்கிழங்கு சுக்கா தயார் !!!

Categories

Tech |