Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. புனித நீர் ஊற்றி அபிஷேகம்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

திருநெல்வேலியிலிருக்கும் நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

திருநெல்வேலியிலிருக்கும் பிரசித்தி பெற்ற கோயிலான நெல்லையப்பர் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்நிலையில் இக்கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி அம்மனுடைய சன்னதியினுள் 1,008 சங்காபிஷேகமும், சுவாமியினுடைய சன்னதியினுள் 108 கலசமும் வைத்து வழிபாடு நடைபெற்றது.

மேலும் தொடர்ந்து சிறப்பு ஹோமமும் கும்ப பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நெல்லை கோவிந்தர், அம்பாள் உட்பட பல்வேறு சன்னதிகள் இருக்கும் கோபுரங்களுக்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் நடந்துள்ளது. மேலும் பல நிகழ்ச்சிகள் இவ்விழாவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |