நெல்லையில் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்த முழு ஊரடங்கால் அதற்கு முன் தினமே கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதில் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல் படுத்தியது. இதனால் அனைத்து கடைகளையும் தமிழக அரசு மூடுவதற்கும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமையின் தேவைகளுக்காக அதற்கு முன்தினமே பொருள்களை வாங்கி சேமித்து வைப்பதற்காக இறைச்சி, மளிகை பொருட்கள், காய்கறிகள் கடைகளில் குவிந்தனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் மாடவீதியிலிருக்கும் மார்க்கெட் பகுதி, உழவர் சந்தை, டவுன் ரத வீதி போன்ற பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.