Categories
தேசிய செய்திகள்

புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க… மத்திய அரசு அனுமதி..!!

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவிவருவதால் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1ம் தேதி முதல் 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நீடிக்கிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ஆக்சிஜன் மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட தலைநகரங்களில் உள்ள பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை உருவாக்கப்படும், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று பிரதமர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |