Categories
மாவட்ட செய்திகள்

குளத்தில் குளிக்கச் சென்ற இலங்கை தமிழர்…. சடலமாக மீட்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

குளத்தில் குளிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் வசிக்கும் இலங்கை தமிழர் மாணிக்கம் என்பவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பெருமாள் புரத்திலுள்ள பிள்ளையார் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணிக்கம் ரொம்ப நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் தேடி வந்த நிலையில் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில்  நேற்று காலை 10 மணி அளவில் குளத்தின் கரையில் மாணிக்கத்தின் உடல் மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |