Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இன்னும் நீ திருந்தலையா… சிறுமிக்கு நடந்த கொடுமை… தி.மலையில் பரபரப்பு…!!

16 வயது சிறுமிக்கு கட்டிட தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கிராமத்தில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான சதீஷ் என்பவர் அந்த சிறுமியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து அவர் அங்குள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சிறுமியை அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அதன் பின் அலறி துடித்த அந்த சிறுமியின் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற கிராம மக்கள் சிறுமியை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |