மாநாடு படத்தின் ஒரு முக்கிய காட்சியை நடிகர் சிம்பு ஒரே ஷாட்டில் நடித்து அசத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து இவர் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் . இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, உதயா, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
Just wrapped up shoot for my favorite scene in #Maanaadu and I just gotto say @vp_offl sir and team take a bow. @SilambarasanTR_ sir just killed it with a single shot that BLEW my mind !🤯 And @iam_SJSuryah sir you were 🔥in this scene ! Can’t wait for you guys to watch it!! 😍
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) April 24, 2021
தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி கல்யாணி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாநாடு படத்தில் எனக்கு பிடித்த காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த காட்சியை சிம்பு ஒரே ஷாட்டில் நடித்து அசத்தினார்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யாவும் இந்த காட்சியில் சிறப்பாக நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகை கல்யாணியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.