Categories
அரசியல் தேசிய செய்திகள்

உலகிலே இந்தியாவில் தான் அதிகம்…! ட்விட் போட்ட பா.சிதம்பரம்…. ஷாக் ஆன இந்திய மக்கள் …!!

கோவிஷீல்டு தொடர்ந்து கோவக்சின் தடுப்பூசியின் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு இதில் மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசியை வாங்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக்கின் கோவக்சின் தடுப்பூசியின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பு ஊசி 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 1,200 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மத்திய அரசுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி 150 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், மத்திய அரசுக்காக 50 விழுக்காட்டிற்கு மேற்பட்ட உற்பத்தியை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

இதைப்போல் கோவிஷீல்டு தடுப்பூசியை வரும் மே 1ஆம் தேதி முதல் மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பல்வேறு நாடுகளை ஒப்பிட்டால் உலகிலேயே இந்தியாவில்தான் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை மிகவும் அதிகம் என்கிறார்கள் மருத்துவ ஆர்வலர்கள். தடுப்பூசி விலை உயர்வுக்கு முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கோவிஷில்டு விலையை உயர்த்திய போது அதனை நியாயப்படுத்திவர்கள் தற்போதும் நியாயப் படுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் சுரண்டலையும், லாபத்தையும் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் பா.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |