நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு சமயத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மட்டும் பாதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.