சேலத்தில் நேற்று முழு ஊரடங்கு அமுலில் இருக்கக்கூடிய சூழலில் மூன்று திருமண மண்டபங்களுக்கு விதிமீறல் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதன் காரணமாக தான் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு நேர ஊரடங்கு முடிந்தவுடன் அதிகாலை 4 மணியிலிருந்தே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடங்கியிருந்தது.
இந்த 30 மணி நேர ஊரடங்கு மக்கள் யாரும் காரணமின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தி இருக்கிறது. அதைப்போல திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் ஏற்கனவே திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் காரணமாக அந்த திருமண விழாக்களை பொறுத்தவரை 100 பேர் மட்டுமே அந்த திருமண விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாட்டையும் தமிழக அரசாங்கம் அறிவித்து இருக்கின்றது.
அதுமட்டுமில்லாமல் திருமண விழாவில் பங்கேற்க கூடியவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், திருமண மண்டபத்திற்குள் நுழையும்போது அவர்களுக்கு சனிடைசர் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என அறிவித்து இருக்கிறது.
நேற்று 25 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான திருமணங்கள் சேலத்த்தில் நடைபெற்று வந்தன. பல்வேறு மண்டபங்களிலும் இந்த திருமண விழாக்கள் நடைபெறுவதன் காரணமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டாலும், மக்களைப் பொறுத்தவரை இருசக்கர வாகனங்களில் தம்பதிகள் வந்தனர்.இதன் காரணமாக ஆங்காங்கே காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி திருமண அழைப்புகள் இருந்தால் மட்டுமே, அவர்களை திருமணத்திற்கு அனுமதிக்கக் கூடிய ஒரு நிலை இருந்தது.
இந்த நிலையில்தான் சேலத்தில் உள்ள மூன்று திருமணங்களில் கூடுதலாக உறவினர்கள் வந்ததன் காரணமாகவும், அந்த திருமணத்தில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக் கவசம் அணியாமல் இருந்ததன் காரணமாகவும் மூன்று மண்டபங்களுக்கு, அதாவது தலா 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மரபுநெறி பகுதியில் உள்ள மாதவம் என்ற திருமண மண்டபத்திற்கும், சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியிலுள்ள பவானி மஹால் மற்றும் ஜி.வி.எல் திருமண மண்டபம் என தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.