Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு இந்த உதவியை செய்ய வேண்டும்…. கோரிக்கை விடுத்த அமெரிக்க எம்.பி…. என்ன உதவி தெரியுமா….?

அமெரிக்க எம்.பி இந்தியாவுக்கு  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மருந்துகள் கொடுத்து உதவலாம் என  அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவதால் நம்மிடம் இருக்கும் 40 மில்லியன் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மருந்துகள் கொடுத்து உதவலாம் என அதிபர் ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ் வம்சாவளியை சேர்த்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |