இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் SUV காரன “செல்டோஸ்” முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் SUV காரான செல்டோஸ் காரை ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இந்த SUV செல்டோஸ் காரை வாங்குவதற்காக சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இரு வேரியண்ட்களில் இந்த கியா செல்டோஸ் கார் கிடைக்கிறது. இத்துடன் மூன்று சப்-வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ. 25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.