20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல் .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 20 வது லீக் போட்டியில் , சன்ரைசஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .எ சிதம்பரம் மைதானத்தில், தொடங்கியது . இதில் டாஸ் வென்ற ,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தொடக்க வீரர்களாக பிரித்திவி ஷா -ஷிகர் தவான் களமிறங்கினர் .இதில் பிரித்வி ஷா தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி வருகிறார் . இவர் 28 பந்துகளில் 6 பவுண்டரி ,1 சிக்ஸரை அடித்து 40 ரன்களை குவித்துள்ளார் .ஷிகர் தவான் 14 பந்துகளில் ,14 ரன்களை எடுத்து உள்ளார் டெல்லி அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் ஏதுமின்றி ,56 ரன்களை குவித்துள்ளது .