கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தைக்கு வாழைத்தார் வரத்து குறைந்ததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழைத் தோட்டங்களில் வாழைத்தார் அறுவடை சரிவர நடைபெறவில்லை. இதன்காரணமாக நாகர்கோவிலில் உள்ள வாழைத்தார் சந்தைக்கு வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் வாழைத்தார் விலை கடந்த ஒரு வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது. 100 ரூபாய்க்கு விற்பனையான ரசகதலி வாழைத்தார் ஒன்று தற்போது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதைப்போன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வாழை இலை ஒரு கட்டு 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.