Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RCB :ஆல்ரவுண்டரில் ஜடேஜா அதிரடி…! 69 ரன்கள் வித்தியாசத்தில்… சிஎஸ்கே அபார வெற்றி…!!!

ஆல்ரவுண்டரில் ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ,சிஎஸ்கே அணி 69 ரன்கள் வித்தியாசத்தில், ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது .

14 வது  ஐ.பி.எல் தொடரின் , 19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூர் அணிகள்  மோதின .மும்பை வான்கண்டே மைதானத்தில் நடந்த போட்டியில் , டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்  பேட்டிங்கை  தேர்வு செய்தது . அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 50 ரன்கள் மற்றும் ஜடேஜா 62 ரன்கள் குவிக்க ,இறுதில்  சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 191 ரன்களை எடுத்தது .அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி   192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க வீரர்களாக படிக்கல் -விராட் கோலி களமிறங்கினர் .

விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழக்க ,அடுத்து படிக்கல் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள் , மேக்ஸ்வெல் 22 ரன்கள் மற்றும்                      டி வில்லியர்ஸ் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இந்த 3 விக்கெட்டுக்களை ஜடேஜா கைப்பற்றினார் . இதனால் 10.1 ஒவரிலேயே ஆர்சிபி அணி  5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது .இறுதியாக  ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் ,9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்து படுதோல்வி அடைந்தது .இதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில், சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது .

Categories

Tech |