Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 2, 6, 4… ஒரே ஓவரில் 37 ரன்கள்…. கெயிலை மிஞ்சிய ஜடேஜா …!!

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு  ஓவரில் 37 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் 19ஆவது லிக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சஜ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி பெங்களூர் அணி பவுலிங் செய்தது. சென்னை அணி சார்பில் முதலில் களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்குவாட்  33 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து அரை சதத்தை நிறைவு செய்த பாப் டூப்லெஸ்ஸி பட்டேல் வீசிய பந்துக்கு அவுட் ஆனார். பின்னர் சுரேஷ் ரெய்னா 24 ரன்களிலும் , அம்பத்திராயுடு 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து ஜடேஜா வும், தோனியும் களத்திற்கு வந்தனர். அதிரடியான ஆட்டத்தை கொடுத்த ஜடேஜா 62 ரன்களை சேர்த்தார். இறுதி ஓவரில் ஐந்து சிக்சர்கள், ஒரு ஃபவுண்ட்ரி விளாசிய ஜடேஜா அந்த ஓவரில் மட்டுமே 37 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே கடைசி ஓவரில் 37 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கிறிஸ் கெயில் ஒரு ஓவரில் 36 ரன்கள் அடித்தது மட்டுமே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |