Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்காதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… வேளாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை அதிகாரிகள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் திடீரென்று உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை நிலையங்களில் உரங்களை விவசாயிகளுக்கு உரிய ரசீதுடன் விற்பனை முனைய கருவி மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கூறினர். மேலும் விவசாயிகளுக்கு உர உரிமத்தில் அனுமதி பெறாத உரங்களை விற்பனை செய்யக்கூடாது என்று கூறிய அவர் உரிய ஆவணங்களின்றி அதிக உரங்கள் விற்றாலோ, உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ உர கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் விவசாயிகள் இது தொடர்பாக பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குனரை 9487073705 என்ற எண்ணிலும், பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை 9787061637 என்ற செல்போன் எண்ணிலும், வேளாண்மை அலுவலரை 9677799938 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அவர்கள் கூறினர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான டி.ஏ.பி. உரம் 667 மெட்ரிக் டன்னும், யூரியா உரம் 1,990 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 1,903 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,071 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 307 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 5,938 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளது என்றனர்.

Categories

Tech |