Categories
தேசிய செய்திகள்

வரும் வாரங்களில் கொரோனா உச்சம் தொடும்… மக்களே! எச்சரிக்கை… மத்திய அரசு தகவல்….!!

இன்னும் ஒரு வாரங்களில் கொரோனாவின் பாதிப்பு உச்சநிலையை அடையும், மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பரவி விரிந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு மிக முக்கிய ஒன்றாக ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில நாட்களாகவே ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் நிலவுகின்றது.

இதுதொடர்பாக டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை குறித்து தனியார் நிறுவனங்கள் கொடுத்துள்ள வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய மத்திய அரசு வரும் வாரங்களில் கொரோனாவின் பாதிப்பு விளிம்பின் உச்சிக்குச் செல்லும், அனைத்து மாநில அரசுகளும், மக்களும் முழுமையாக எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, முக கவசம், அணிந்து தனிமனித இடைவெளியை பயன்படுத்தினால் மட்டுமே இதனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். மோசமான சூழலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதன்பின் ஆக்சிஜன் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |