கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில், இந்திய மக்களுக்கு துணை நிற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிலிங்கன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் நிலையை அமெரிக்கா உற்றுநோக்கி வருவதாகவும், கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு கூடுதல் உதவிகளை துரிதமாக வழங்குவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மக்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய தயார் என்று கூறப்பட்டுள்ளது.