விஜய் பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
நெல்சன் இயக்கும் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோ படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஜீவாவின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். பிறகு இவருக்கு தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
தற்போது இளைய தளபதி விஜய் உடன் தளபதி 65 படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக பரிசோதனை செய்யும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.